Wednesday, 23 December 2015

சுதந்திரமான இணையம் - Internet Freedom - NetNeutrality




நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கு!

அண்மைகாலமாக Facebookல் #FreeBasics ஐ ஆதரித்து e-mail அனுப்புமாறு ஒருசெய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை தயவுசெய்து
தவிர்த்துவிடுங்கள்.

இதேபோன்ற செய்தி குறுஞ்செய்தி (SMS) மூலமாக வருகிறது அதில் ஒரு எண்ணிற்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுக்குமாறு

சொல்லப்பட்டுள்ளது அதையும் செய்யவேண்டாம்.

அப்படி e-mailலோ Missed Callலோ செய்தால் வருங்காலத்தில் Facebook போன்ற இணையத்தளங்கள் தவிர மற்ற தளங்களை நீங்கள்

உபயோக படுத்த சிறப்பு கட்டணம் என்ற பெயரில் தொலைபேசி நிறுவனங்கள் கூடுதலாக மிக அதிக பணம் வசூலிக்கும் நிலை வரக்கூடும்.

அப்படி நடந்தால் அதிக கட்டணத்துக்கு பயந்து நாம் நம் தொலைபேசி நிறுவனகள் சலுகை விலையில் தரும் இணையதளங்களையே அதிகம்

பயன்படுத்துவோம்.

அப்படி நடந்தால் எந்த ஒரு புதிய சேவையும் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்காது. நாளை நீங்களோ நானோ இணயத்தில் Facebook போன்ற ஒரு

சிறிய இணையதளம் துவங்கினால் அது Facebook போன்ற பெரிய தளங்களால் நசுக்கப்படும்.

அப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள் இணையத்தளத்தில் எதை பார்க்கவேண்டும் எதை பார்க்கக்கூடாது என்பதை தொலைபேசி நிறுவனங்களும் Facebook போன்ற நிறுவனங்களுமே தீர்மானிக்கும்.

இது #NetNeutrality என்கிற இணையதள சுதந்திரத்திற்கு எதிரானதாகும். இணையம் (Internet) எல்லோராலும் எல்லாவற்றையும்

பெறக்கூடிய சுதந்திரமான அமைப்பு. அந்த சுதந்திரத்தை Facebook மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் பறிக்க பார்க்கின்றனர்.

இதுபோன்ற இலவச மற்றும் சலுகைவிலை சேவைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளது. இந்தியாவிலும் அதுபோன்ற தடை

விதித்து சுதந்திரமான இணையதள சேவைக்கு வழிசெய்யகோரி பல்வேறு அமைப்புகள் போரடிகொண்டிருகின்றனர்.

இது  (NetNeutrality) பற்றி இந்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டுருக்கிறது. அந்த கருத்துகேட்புக்கு நீங்கள் Facebook க்கு

ஆதரவாகவும் இனைய சுதந்திரத்திற்கு எதுர்ப்பு தெரிவிக்கவும் சொல்கிறது இந்த  e-mailம்  Missed Callம்.

இந்த விஷயத்தில் சுதந்திரமான இணையம் (Internet) வேண்டும் என்ற கருத்தை #SaveTheInternet/ என்ற இணையதளத்திற்கு சென்று e-mail மூலம் இந்திய அரசுக்கு தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment