Wednesday, 7 May 2014

வங்கிகளில் வாராக் கடன் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி: கடனை செலுத்தாத 406 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு

வங்கி கடனை திருப்பிச் செலுத்தாத 406 பெரும் தொழில் நிறுவனங்களின் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் வெளியிட்டனர்.
பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் தொகை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துவிட்டது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாத 406 பெரிய தொழில் நிறுவனங்களின் பட்டியலையும் அந்தச் சங்கம் வெளியிட்டுள்ளது. 

சென்னையில் செவ்வாய்க்கி ழமை பட்டியலை வெளியிட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், பின்னர் நிருபர்களிடம் கூறிய தாவது: 

கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் வரை ரூ.39 ஆயிரம் கோடியாக மட்டும் இருந்த வாராக்கடன் தொகை, 2013-ம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கும் மேல் சென்றுவிட்டது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் கோடி புதிய வாராக்கடன்கள் உரு வாகியுள்ளன. 

அவ்வாறு கடனை திருப்பிச் செலுத்தாத 406 தொழில் நிறுவனங்களின் பட்டியலை எங்கள் சங்கம் வெளியிட்டுள் ளது. இந்த 406 நிறுவனங்கள் மட்டும் ரூ.70 ஆயிரத்து 300 கோடி கடன் தொகையை திருப் பிச் செலுத்தாமல் உள்ளன.
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத தொழில் நிறுவனங் கள் மீது குற்ற வழக்குகள் தொடர்ந்து, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். 

வங்கிகளில் வாராக் கடன்கள் உயர்வதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வரும் ஜூன் மாதம் மக்களிடையே பிரச்சாரம் செய்ய உள்ளது. இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார். 

பேட்டியின்போது தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் அருணாசலம், ஊழியர் சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், ரகுராமன், சங்கரவடிவேல், மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந் தனர். 

பாமக விளக்கம்
வாராக்கடன் பட்டியலில் வன்னியர் அறக்கட்டளை பெயர் இருப்பது குறித்து பாமக தரப்பில் கேட்டபோது, ‘‘எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறும் வகையில் லாப நோக் கில்லாமல் கல்வியை அளித்து வருகிறோம். அத னால், பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. அறக் கட்டளைக்குச் சொந்தமான நிலங்களை விற்று இந்தியன் வங்கி (சென்னை தலை மையகம்) கிளையில் பெற்ற கடனை அடைக்க முடியுமா என ஆலோசித்து வருகிறோம். விரைவில் கடனை திருப்பிச் செலுத்தி விடுவோம்’’ என்றனர். 


யார், எவ்வளவு?  
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் 2673 கோடி 

மும்பை எஸ்.குமார் ஜவுளி 1758 கோடி 

ஸ்டெர்லிங் குழுமம் 3672 கோடி 

சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ் 1446 கோடி

வருண் இண்டஸ்ட்ரீஸ் 1129 கோடி 

வின்ஸம் டைமண்ட் 3156 கோடி 

ஜூம் டெவலப்பர்ஸ் 1809 கோடி 

தமிழகத்தின் ஆர்கிட் கெமிக்கல்ஸ் 938 கோடி 

அருப்புக்கோட்டை ஸ்ரீஜெயவிலாஸ் 31 கோடி 

தீன்தயாள் மருத்துவக் கல்வி நிறுவனம் 69 கோடி 

மோகன் புரூவரீஸ் அண்ட் டிஸ்டில்லரீஸ் 135 கோடி 

நியூ சென்னை டவுன்ஷிப் 233 கோடி 

வன்னியர் கல்வி அறக்கட்டளை 19 கோடி 

No comments:

Post a Comment