ஆட்டோவுல ஒரு பயணம். ஆட்டோக்காரர் சும்மா என்கூட பேசிட்டே வந்தார்... தொழில் பக்கத்துக்கு கத போச்சு...
"உங்க சம்பாத்தியம் எல்லாம் எப்டி போகுது அண்ணே?? நல்ல வருமானமா இல்ல சாதாரணம் தானா??" நான் கேட்டன்...
"அப்டின்னு இல்ல தம்பி.. ஒருநாளைக்கி எப்டியும் 12 அவர் ஓட்டுறன்.. மாசம் எப்டியும் 40 லருந்து 45000 கிடைக்குது.." அப்டின்னு சலிச்சிக்கிட்டார் அவர்.
அட நம்ம அரசாங்க உத்தியோகத்துக்கே அவ்வளவு கிடைக்காதே.. நல்ல சம்பளம் தானே.. ஏன் இந்த மனுஷன் சலிக்குது?? மனசுக்குள்ளயே எண்ணிட்டு அத வேற மாதிரி கேட்டன்.
"45000 ஆ??? சூப்பர்.. அப்புறம் என்னண்ணே.. தாராளமா போதும் தானே.. இப்பெல்லாம் அவ்வளவு சம்பளத்த எதிர்பாக்கவே முடியாது.. பேசாம ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டலாம் மாதிரி இருக்கு" சிரிச்சிட்டே போட்டு வாங்க பாத்தன்..
"உங்க சம்பளம் மாதிரி எங்க சம்பளம் எங்ககிட்ட தங்குரதில்ல தம்பி. எப்படி போகுதுனே தெரியாது. ஒரு 20000 ல இருக்கிற அந்த பொலிப்பு எங்க வருமானத்துல இல்ல" என்ற அந்த குரல்ல ஒரு சலனம் தெரிஞ்சிச்சு..
என்ன இந்த ஆள் இப்படி சொல்லுது?? அப்டி என்ன தப்பான தொழில் இது?? எந்த விஞ்ஞானத்த இவர் விளக்க போறாரு?? அப்டின்னு மனசுல நெனச்சிட்டு
"ஏன் அண்ணே அப்படி சொல்றீங்க??" தாழ்மையாக கேட்டன்.
"தம்பி... ஆட்டோல போற யாருமே இறங்கினதும் மனசார காசு தாரதில்ல. ஏறும்போதே எங்க இயலாமைய பயன்படுத்தி ரொம்ப குறைச்சி தான் எர்றாங்க.. இறங்கும்போது கூட "இந்த தூரத்துக்கு இது அதிகம் தான் புடிங்க" ன்னு சொல்லித்தான் காச தாராங்க.. நாங்கென்னமொ அவங்ககிட்ட காச புடுங்கின மாதிரி தான் அவங்க நினைப்பு.. மீட்டர் வந்தது இன்னும் பிரச்சன. ஏறின ஆள் இறங்குற வரைக்கும் நிம்மதியா இருக்கிறதில்ல.. மீட்டர்ல தான் கவனம் எல்லாம்..
வேண்டாவெறுப்பா தார காசு எப்பவும் கையில தங்காது தம்பி.. இவங்கட சாபக்காசுல தான் என் புள்ளைங்க படிக்கிறதும் சாப்பிடறதும்.."
மனம் வருந்திச் சொன்னார்.. நான் பதில் குடுக்க முதலே இறங்க வேண்டிய இடம் வந்துரிச்சி. வரலைனாலும் பதில் குடுத்திருக்க முடியாது. கடைமட்ட தொழிலாளர்களிடம் பேரம் பேசாமலிருப்போம்.
கொடுப்பதை மனதார கொடுப்போம்!!
No comments:
Post a Comment