Friday, 9 May 2014

யார் பைத்தியகாரன்???

Representational Image

தூத்துக்குடில வழக்கமா ஒரு கடைல டீ குடிப்பேன், நேத்தும் அப்படி தான், ஒருவர் டிரஸ் கிழிஞ்சி பாக்க பாவமா நாமலாம் பைத்தியகாரன்னு சொல்லுவோம்ல அப்படி தான் இருந்தாரு... அவரை பார்தத்தும் எல்லாரும் ஒதிங்கி நின்றனர். என் நண்பன் ஒரு டீ வாங்கி கொண்டு போய் குடுத்தான், அதை வாங்க மறுத்து விட்டார், பின்னர் வடை வாங்கி கொடுத்தான் அதையும் வாங்க மறுத்து விட்டார்...

அந்த கடைக்காரரிடம் "என்ன அண்ணாச்சி டீ குடுத்தா வாங்கமாட்டேன்குறாருன்னு நான் கேட்டேன்" ....


கொஞ்சம் பொருங்க தம்பி நீங்களே பாப்பிங்க....


பின்னர் சிறிது நேரம் அங்கே நின்று கொண்டு இருக்கும் போது, கூட்டம் குறைந்த பின்னர் அந்த நபர் அந்த டீ கடையின் வெளியே நாம் சாப்ட்டுவிட்டு கீழே போடும் பேப்பர்களையும், இலைகளையும் அள்ளி குப்பைதொட்டியில் போடுகிறார், அதன் பின்னர் டீ கடை அண்ணாச்சி ஒரு டீயும் வடையும் குடுக்க அதை அந்த நபர் பெற்று கொண்டு செல்லுகிறார்...


இப்ப சொல்லுங்க யார் பைத்தியகாரன்???

No comments:

Post a Comment