8 மணிக்கு கார்கள்- பஸ்கள்- ஆட்டோக்கள்- மோட்டார் சைக்கிள்- வியர்க்க விறுவிறுக்க நடை பயிற்சி முடித்த பெரியவர்கள்- என்று படு 'பிசி'.
விவேகானந்தர் இல்லம் எதிரே ஆகாயத்தைப் பார்த்தவாறு ஆனந்தமாக கால்மேல் கால்போட்டு ஒரு இளைஞன் !
'என்னப்பா, ஊரே பரபரப்பா இருக்கு. நீ பாட்டுக்கு இப்படி சோம்பேறித்தனமா படுத்திருக்கயே ?' - என்றார் ஒரு பெரியவர்.
'என்ன பண்ணச் சொல்றீங்க '...
'அட, சும்மா இருக்கறதுக்கு பதிலா பீச்சில தேங்கா- மாங்கா- பட்டாணி சுண்டல் வித்தா நாலு காசு பாக்கலாம்ல'
'அப்புறம் சார் ? '
'அப்பறம் என்ன, கொஞ்சம் நாள் கழிச்சு, வேலையில்லாம சுத்தற பசங்களை வச்சு நீயே பீச் முழுக்க வியாபாரம் பண்ணினா 1000 -2000 ரூ சம்பாதிக்கலாம்ல'
'அப்பறம் சார்?'
'அப்பறம் என்ன - அப்படியே ஜூனியர் குப்பண்ணா - சரவண பவன் மாதிரி மெட்ராசில 5,6 எடங்கள்ள பிராஞ்ச் ஆரம்பிச்சேன்னா லட்சங்களை பாக்கலாம்ல'
'அப்பறம் சார் ?'
'அட,நேரம் நல்லா இருந்தா நியூயார்க்ல ஒரு பிராஞ்ச் ஓபன் பண்ணி கோடிக்கணக்கில சம்பாதிக்கலாம்ல'
'அப்பறம் சார் ?'
'அப்பறம் என்னப்பா, பேங்கில பணத்தை டெபாசிட் பண்ணிட்டு கால்மேல கால் போட்டு ஜாலியா இருக்கவேண்டியதுதான் !!'
'அதுத்தானே சார்..இப்ப நான் பண்ணிட்டுருக்கேன் !!'.....
பூமியில் பிறந்த எல்லோருமே லட்சியவாதியாக இருக்கமுடியுமா ?
அவனுக்கு தேவை, தினம் 50 அல்லது 100 ரூ. ஒரு மூட்டை , ரெண்டு லக்கேஜ் தூக்கினா அது கிடைக்கும். அதில சாப்பிட்டு ஆனந்தமாக இருக்கான்...
கோடிகள் தேடிப்போனவங்களில் பல பேர் கொஞ்சங்கூட நிம்மதியில்லாம தவிக்கறதையும் பார்க்கறோம்....
குடிசையில் நீ இருக்கியா கோடி ரூபா வீட்ல இருக்கியாங்கறது முக்கியமில்ல.
மன நிம்மதியோடயும் உடல் ஆரோக்கியத்தோடயும் இருக்கியாங்கறதுதான் முக்கியம் !
ஆக ,தேவை எவனுக்கு குறைவாக இருக்கிறதோ அவனே செல்வந்தன் 😊
Courtesy - ActorSivakumar
No comments:
Post a Comment