Wednesday 5 November 2014

ஏர்டெல் அதிபரின் பத்து வரங்கள்



ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.

பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர், 'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும், அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.

வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார்.

அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.

மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.

நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய்,8வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.

கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?அது மாதிரி தான் இதுவும்,3 வரம் சர்விஸ் சார்ஜ்.யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார்.

via Aslam KhanCreatetivity

No comments:

Post a Comment